ஆஸ்கர் வரலாற்றில் முதல் பெண் ஒளிப்பதிவாளராக தாரால்ட் அர்காபா புதிய சாதனை
March 16, 2026

98-வது ஆஸ்கர் விருது விழாவில் ‘சின்னர்ஸ்’ மற்றும் ‘ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்’ திரைப்படங்கள் முக்கிய விருதுகளைக் குவித்து வருகின்றன. குறிப்பாக சின்னர்ஸ் படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளர் விருதை வென்றதன் மூலம், அந்தப் பிரிவில் ஆஸ்கர் வென்ற முதல் பெண்மணி என்ற வரலாற்றுச் சாதனையை தாரால்ட் அர்காபா படைத்துள்ளார்.
நடிகர் சீன் பென் தனது மூன்றாவது ஆஸ்கர் விருதை சிறந்த துணை நடிகருக்கான பிரிவில் வென்று அசத்தினார். மேலும் லுட்விக் கோர்டான்சன் இசைக்காகவும், ரையான் கூக்லர் சிறந்த திரைக்கதைக்காகவும் விருதுகளைத் தட்டிச் சென்றனர். சர்வதேசத் திரைப்படப் பிரிவில் நார்வேயின் ‘சென்டிமென்டல் வேல்யூ’ மற்றும் சிறந்த அனிமேஷன் படமாக ‘கே-பாப் டீமான் ஹண்டர்ஸ்’ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.