ஆரவல்லி மலைத்தொடர்: மோடி அரசின் முடிவால் சோனியா காந்தி ஏன் ஆவேசம்?

ஆரவல்லி மலைத்தொடர்: மோடி அரசின் முடிவால் சோனியா காந்தி ஏன் ஆவேசம்?

மத்திய அரசின் அண்மைய முடிவின் காரணமாக இந்தியாவின் தொன்மையான ஆரவல்லி மலைத்தொடர் தற்போது ஆபத்தில் உள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் குழுவின் பரிந்துரையின்படி, 100 மீட்டருக்கும் குறைவான உயரம் கொண்ட மலைகளில் கனிம சுரங்கம் மற்றும் அகழ்வுப் பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வடமேற்கு இந்தியாவின் காலநிலையை ஒழுங்குபடுத்தும் இந்தப் பள்ளத்தாக்கைக் காக்க சுற்றுச்சூழல் வல்லுநர்கள் ‘ஆரவல்லியின் பசுமைச் சுவர்’ அமைக்கும் திட்டத்தை முன்வைத்த நிலையில், மத்திய அரசின் இந்த முடிவை காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி ஆரவல்லியின் ‘மரண ஆணை’ என்று வர்ணித்துள்ளார்.

மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, இந்த முடிவால் மோடி அரசாங்கம் நாட்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மிக மோசமான நிலைக்குத் தள்ளியுள்ளது என்றும், இது சுரங்க மாஃபியாக்களுக்கு ஒரு திறந்த அழைப்பு என்றும் குற்றம் சாட்டியுள்ளார். 1980ஆம் ஆண்டின் வன (பாதுகாப்பு) சட்டம் மற்றும் 2022ஆம் ஆண்டின் வனப் பாதுகாப்பு விதிகளில் கொண்டு வரப்பட்ட திருத்தங்களை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். ஆரவல்லி மலைத்தொடரில் 90% மலைகள் 100 மீட்டருக்கும் குறைவான உயரம் கொண்டவை என்பதால், இந்த முடிவு சுற்றுச்சூழலுக்குப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் மற்றும் பிராந்திய புவியியலுக்கு கடுமையான அச்சுறுத்தலை உருவாக்கும் என்று சுற்றுச்சூழல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *