ஆயுத இறக்குமதி சந்தையில் உலக அளவில் பெரும் மாற்றம் ஏற்பட்டு இந்தியாவை பின்னுக்கு தள்ளியது ஒரு நாடு

ஆயுத இறக்குமதி சந்தையில் உலக அளவில் பெரும் மாற்றம் ஏற்பட்டு இந்தியாவை பின்னுக்கு தள்ளியது ஒரு நாடு

ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் (SIPRI) புதிய தரவுகளின்படி, உக்ரைன் உலகின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதி நாடாக மாறியுள்ளது. உலகளாவிய சந்தையில் 9.7 சதவீத பங்களிப்புடன் உக்ரைன் முதலிடத்தைப் பிடித்துள்ள நிலையில், இந்தியா 8.2 சதவீதத்துடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. ரஷ்யாவுடனான போர் காரணமாக உக்ரைனின் ராணுவத் தேவைகள் அதிகரித்துள்ளதே இந்த மாற்றத்திற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

இந்தியாவின் ஆயுத இறக்குமதி 9.8 சதவீதத்திலிருந்து 8.3 சதவீதமாகக் குறைந்துள்ளது ஒரு மைல்கல்லாகும். ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் மூலம் உள்நாட்டுத் தயாரிப்புகள் அதிகரித்துள்ளதால் வெளிநாட்டுச் சார்பு குறைந்து வருகிறது. தற்போது ரஷ்யாவிடமிருந்து 40 சதவீத ஆயுதங்கள் வந்தாலும், ரஃபேல் ஒப்பந்தங்களால் பிரான்சின் பங்கு 29 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்தியா இப்போது ஆயுதங்களை வாங்கும் நாடாக மட்டுமல்லாமல், தயாரிக்கும் நாடாகவும் உருவெடுத்து வருகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *