ஆன்லைன் கேமில் அக்ஷய் குமாரின் மகளுக்கு அதிர்ச்சி! நிர்வாணப் படங்கள் அனுப்ப மிரட்டல்; நடிகர் வெளியிட்ட தகவல்!
October 5, 2025

நடிகர் அக்ஷய் குமார் மும்பை காவல்துறையின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, தன் மகளுக்கு நடந்த ஒரு மோசமான சம்பவத்தைப் பகிர்ந்துகொண்டார். அவரது மகள் ஆன்லைனில் ஒரு விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தபோது, அறிமுகமில்லாத ஒரு நபர் பாலினம் (Gender) குறித்துக் கேட்டுள்ளார். அதற்கு அந்தச் சிறுமி வெகுளியாக ‘Female’ என்று பதிலளித்த உடனேயே, அந்த நபர் அவளது நிர்வாணப் படங்களை அனுப்பச் சொல்லி பயங்கரமாகக் கேட்டுள்ளார்.
உடனே தனது மகள் விளையாட்டை நிறுத்திவிட்டு, அதை அணைத்துவிட்டு, நடந்த அனைத்தையும் தாயிடம் தெரிவித்ததாக நடிகர் கூறினார். இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டுப் பேசிய அக்ஷய் குமார், ஆன்லைன் தளங்களில் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பெற்றோரின் விழிப்புணர்வின் அவசியத்தை வலியுறுத்தினார்.