ஆந்திராவில் நச்சு பால் குடித்த 13 பேர் பலியான விபரீதம்
March 13, 2026

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் லாலாசெருவு மற்றும் ஸ்வரூப் நகர் பகுதிகளில் கலப்பட பால் குடித்த 13 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த பிப்ரவரி 22 முதல் வாந்தி மற்றும் வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட 11 பேர் தற்போது கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து மாநில சுகாதாரத் துறை அந்தப் பகுதிகளில் அவசர மருத்துவ முகாம்களை அமைத்துள்ளது. பாலின் மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.