ஆதவ் அர்ஜுனா விரித்த வலையில் சிக்கினாரா விஜய் தவெகவின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறி

ஆதவ் அர்ஜுனா விரித்த வலையில் சிக்கினாரா விஜய் தவெகவின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறி

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாடுகள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன. கட்சித் தலைவர் விஜய்யின் அண்மைக்கால அரசியல் போக்கிற்கும், சர்ச்சைக்குரிய பேச்சுகளுக்கும் பின்னால் லட்டரி தொழிலதிபர் ஆதவ் அர்ஜுனா இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். கட்சியின் பொருளாதாரத் தேவையை முன்னிறுத்தி, விஜய்யை ஆதவ் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

விசிகவில் இருந்து வெளியேறி தவெகவில் இணைந்த ஆதவ், முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரை விமர்சித்து கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சொந்தமாகப் பணம் செலவழிக்கத் தயங்கும் விஜய்யின் பலவீனத்தைப் பயன்படுத்தி, ஆதவ் தனது விருப்பப்படி கட்சியை இயக்குகிறார். இந்தத் தவறான வழிகாட்டுதலால் தவெகவின் தேர்தல் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படும் என அரசியல் வட்டாரங்கள் எச்சரிக்கின்றன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *