அறிவாலயம் vs சத்தியமூர்த்தி பவன் ஸ்டாலின் கடிதத்தில் காங்கிரஸ் பெயர் புறக்கணிப்பு கூட்டணி உடைகிறதா

அறிவாலயம் vs சத்தியமூர்த்தி பவன் ஸ்டாலின் கடிதத்தில் காங்கிரஸ் பெயர் புறக்கணிப்பு கூட்டணி உடைகிறதா

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், திமுக மற்றும் காங்கிரஸ் இடையிலான விரிசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. கட்சித் தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூட்டணிக் கட்சிகளான விசிக, கம்யூனிஸ்ட் மற்றும் மதிமுக பெயர்களைக் குறிப்பிட்டுள்ள நிலையில், காங்கிரஸ் பெயரைத் திட்டமிட்டுத் தவிர்த்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொகுதிப் பங்கீட்டில் காங்கிரஸ் பிடிவாதம் காட்டுவதும், திமுகவின் கோட்டைகளைக் கேட்பதும் ஸ்டாலினை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. புதுச்சேரியில் திமுக வேட்பாளர்களுக்கு எதிராக காங்கிரஸ் வேட்புமனு தாக்கல் செய்தது இந்த மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. ராகுல் காந்தி தலையிடாதது அறிவாலயத் தரப்பை கொந்தளிக்கச் செய்துள்ள நிலையில், பெயரளவில் மட்டுமே கூட்டணி நீடிப்பதாக உடன்பிறப்புகள் கருதுகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *