அமெரிக்க போர்க்கப்பல் சேதம் குறித்த செய்தியால் ஊடகங்கள் மீது தேசத்துரோக வழக்கு தொடரப்போவதாக டிரம்ப் எச்சரிக்கை

அமெரிக்க போர்க்கப்பல் சேதம் குறித்த செய்தியால் ஊடகங்கள் மீது தேசத்துரோக வழக்கு தொடரப்போவதாக டிரம்ப் எச்சரிக்கை

ஈரான் போரில் அமெரிக்காவின் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பல் தீப்பற்றி எரியும் படங்கள் வெளியானதால் அதிபர் டிரம்ப் கடும் கோபமடைந்துள்ளார். இதுகுறித்து சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள அவர், அமெரிக்காவின் வெற்றியை குறைத்து மதிப்பிடும் ஊடகங்கள் தேசத்துரோகம் செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அந்தப் புகைப்படங்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட போலியானவை என்றும் அவர் வாதிடுகிறார்.

போர் தொடங்கி இரண்டு வாரங்கள் ஆகியும் ஈரானை பணியவைக்க முடியவில்லை. இஸ்ரேல் ஈரான் மீது குண்டுவீச்சு நடத்தினாலும், பதிலுக்கு ஈரானின் ஏவுகணைகள் இஸ்ரேலை தாக்கி வருகின்றன. இந்த இக்கட்டான நிலையில் சீனாவிடம் டிரம்ப் உதவி கோரியுள்ளார். இதற்கிடையே, செங்கடலில் உள்ள மற்றொரு அமெரிக்க போர்க்கப்பலான யுஎஸ்எஸ் ஃபோர்டு மீதும் தாக்குதல் நடத்தப்போவதாக ஈரான் ராணுவம் எச்சரித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *