அபிஷேக் சர்மாவின் பேட்டிங் குறித்து அந்தி அந்தி பேசிய முகமது அமீர்

அபிஷேக் சர்மாவின் பேட்டிங் குறித்து அந்தி அந்தி பேசிய முகமது அமீர்

டி20 உலகக் கோப்பையில் தொடர் தோல்விகளைச் சந்தித்து வரும் இந்திய வீரர் அபிஷேக் சர்மாவை ‘ஸ்லாகர்’ என்று விமர்சித்த பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது அமீர், தற்போது தனது கருத்தை மாற்றிக்கொண்டுள்ளார். அபிஷேக்கின் பேட்டிங் நுட்பத்தில் குறைபாடுகள் இருப்பதாகவும், அவர் பவர் ஹிட்டிங்கை மட்டுமே நம்பியிருப்பதாகவும் அமீர் முன்பு கூறியிருந்தார், இது இந்திய ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

தற்போது விளக்கமளித்துள்ள அமீர், அபிஷேக்கின் திறமையை தான் சந்தேகிக்கவில்லை என்றும், ஒரு மூத்த வீரராக அவரது பலவீனத்தை சுட்டிக்காட்டவே முயன்றதாகவும் கூறியுள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் அபிஷேக் தடுமாறியதை குறிப்பிட்ட அவர், சர்வதேச பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள அபிஷேக் தனது பேட்டிங் நுட்பத்தையும் பொறுமையையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *