அனில் அம்பானிக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்த அமலாக்கத்துறை
March 13, 2026

யெஸ் வங்கி உள்ளிட்ட வங்கிகளில் ரூ.11,000 கோடிக்கு மேல் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாத புகாரில், தொழிலதிபர் அனில் அம்பானிக்கு சொந்தமான ரூ.581.65 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை அதிரடியாக முடக்கியுள்ளது. தமிழ்நாடு, கேரளா மற்றும் கோவா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள நிலங்கள் இதில் அடங்கும்.
சிபிஐ பதிந்த வழக்கின் அடிப்படையில் நடைபெற்ற சோதனையில் இந்த முறைகேடு உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் இதுவரை மொத்தம் ரூ.16,310 கோடி மதிப்பிலான சொத்துக்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.