அதிமுக கூட்டணியில் நீடிக்க டாக்டர் கிருஷ்ணசாமி விதித்துள்ள அதிரடி நிபந்தனை

அதிமுக கூட்டணியில் நீடிக்க டாக்டர் கிருஷ்ணசாமி விதித்துள்ள அதிரடி நிபந்தனை

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிக்கும் நிலையில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். தங்கள் கட்சிக்கு வலுவான 12 முதல் 15 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் வழங்க அதிமுக மறுத்துவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார். இதனால் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினர் ஏமாற்றமடைந்துள்ளதாகவும் உரிய மரியாதை கிடைக்காத பட்சத்தில் 60 முதல் 70 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

தற்போது வரை பாஜக அல்லது பிற அணிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று குறிப்பிட்ட அவர் அதிமுக தாங்கள் கேட்கும் தொகுதிகளை ஒதுக்க முன்வந்தால் மட்டுமே மீண்டும் கூட்டணி குறித்து பரிசீலிக்கப்படும் என்றார். விருப்ப மனுக்களைப் பெற்று வேட்பாளர் நேர்காணலைத் தொடங்கிவிட்ட நிலையில் தங்களைப் புறக்கணிப்பது அதிமுகவிற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். சரியான அங்கீகாரம் கிடைக்காவிட்டால் தனித்து களம் காணத் தயாராகி வருவதாக கிருஷ்ணசாமி தனது பேட்டியில் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *