அணு ஆயுதங்களை கைவிடுகிறது ஈரான், வரலாற்று வெற்றியை அறிவித்தார் டிரம்ப்

அணு ஆயுதங்களை கைவிடுகிறது ஈரான், வரலாற்று வெற்றியை அறிவித்தார் டிரம்ப்

ஈரான் இனி அணு ஆயுதங்களை வைத்திருக்கப் போவதில்லை என அதிகாரப்பூர்வமாக ஒப்புக் கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஈரானின் பெரும்பாலான ஏவுகணைகள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள் ஏற்கனவே அழிக்கப்பட்டுவிட்டதாகக் குறிப்பிட்டார். ஒரு பெரிய மின் உற்பத்தி நிலையத்தைத் தாக்கும் வாய்ப்பு இருந்தும், பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதால் அந்தத் தாக்குதலைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

ஐந்து நாட்கள் போர் நிறுத்தத்தை அறிவித்திருந்த நிலையில், இந்த உடன்படிக்கை அமெரிக்காவிற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. முன்னதாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலால் ஈரானில் கடும் பதற்றம் நிலவியது. தற்போது அணு ஆயுத விவகாரத்தில் ஈரானின் இந்த முடிவானது மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வந்த போர்ச் சூழலைத் தணிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *