அடுத்த வாரமே வங்கி கணக்கில் வரும் ரூ.2000 யாருக்கெல்லாம் இந்த ஜாக்பாட் வாய்ப்பு

அடுத்த வாரமே வங்கி கணக்கில் வரும் ரூ.2000 யாருக்கெல்லாம் இந்த ஜாக்பாட் வாய்ப்பு

தமிழக அரசின் நலத்திட்டங்களின் கீழ் ஏப்ரல் மாதத்திற்கான உதவித்தொகை அடுத்த சில நாட்களில் பயனாளிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக செலுத்தப்பட உள்ளது. மகளிர் உரிமைத் தொகை ஏற்கனவே பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை சேர்த்து வழங்கப்பட்டுவிட்டதால், அடுத்த மாதம் அந்தத் தொகை வராது. இதனால் புதுமைப்பெண் மற்றும் தமிழ் புதல்வன் ஆகிய மற்ற இரண்டு முக்கிய திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி கற்கும் மாணவ மற்றும் மாணவியருக்கு தலா ரூ.1000 வழங்கும் இந்தத் திட்டங்களின் அடுத்த தவணை அடுத்த வாரம் விடுவிக்கப்படும். இதன் மூலம் தகுதியுள்ள மாணவச் செல்வங்களின் குடும்பங்களுக்கு மொத்தம் ரூ.2000 வரை உதவித்தொகை கிடைக்க வாய்ப்புள்ளது. மாணவர்கள் எங்கும் அலைய வேண்டிய அவசியமின்றி அவர்களின் கணக்குகளிலேயே இந்தத் தொகை நேரடியாக வரவு வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *