அக்டோபர் 1 முதல் யுபிஐயின் இந்த சேவை நிறுத்தப்படுகிறது
August 14, 2025

அக்டோபர் 1 முதல், யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) மூலம் பணம் கோரும் சேவை நிறுத்தப்படும். நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) மோசடிகளைத் தடுக்கும் வகையில், ஒருவருக்கொருவர் பணம் செலுத்தும் இந்தச் சேவையை முழுமையாக நிறுத்த உத்தரவிட்டுள்ளது. இது நிதி மோசடிகளைத் தடுக்க எடுக்கப்பட்ட ஒரு முக்கியமான நடவடிக்கையாகும்.
சமீபகாலமாக, பல மோசடி நபர்கள் பணம் கேட்டு பொதுமக்களை ஏமாற்றி வந்தனர். இதுபோன்ற புகார்களை அடுத்து NPCI இந்த முடிவை எடுத்துள்ளது. இருப்பினும், இந்த சேவை தனிநபர்களுக்கு இடையிலான பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே நிறுத்தப்படுகிறது. வணிகர்களுக்கான யுபிஐயின் இந்த பணம் கோரும் வசதி தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும்.