அக்குள் மற்றும் தொடை கருமையை விரட்டலாம்! ஒரே வாரத்தில் பளபளப்பான சருமத்தைப் பெறுவது எப்படி?

அக்குள் மற்றும் உள் தொடை பகுதிகளில் ஏற்படும் கருமை, பலருக்கும் பொதுவான அழகியல் கவலையாகும். வியர்வையில் இருந்து யூரியிக் அமிலம் அதிகமாக வெளியேறுதல், வாசனை திரவியங்கள் மற்றும் முடி அகற்றும் கிரீம்களை அடிக்கடி பயன்படுத்துதல் அல்லது ஹார்மோன் சமநிலையின்மை போன்ற பல்வேறு காரணங்களால் இந்த நிறமாற்றம் ஏற்படலாம். இந்தப் பிரச்சனை அழகைக் குறைத்தாலும், சரியான வீட்டு வைத்தியங்கள் மூலம் இதற்கு எளிதில் தீர்வு காண முடியும்.
சருமப் பராமரிப்பு நிபுணர்களின் கூற்றுப்படி, தொடர்ச்சியான கவனிப்பின் மூலம் இந்த கருமையான திட்டுகளை அகற்றி, சருமத்தின் நிறத்தை மேம்படுத்தலாம். கற்றாழை ஜெல், மஞ்சள், தயிர் மற்றும் கடலை மாவு கலந்த கலவைகள் இதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தினமும் குளிப்பதற்கு முன் 15-20 நிமிடங்களுக்கு கருமையான பகுதிகளில் எலுமிச்சை சாற்றைப் பூசுவதால், ஒரு வார காலத்திற்குள்ளேயே நிறமாற்றம் படிப்படியாகக் குறைந்து, சருமம் பிரகாசமாகவும் பொலிவுடனும் மாறும்.