வங்கி கணக்கில் கைவைத்தால் இனி கவலை வேண்டாம்! RBI-ன் அதிரடி விதியால் ரூ. 25,000 திரும்ப கிடைக்கும்!

ஆன்லைன் பரிவர்த்தனைகள் அதிகரித்து வரும் இன்றைய சூழலில், டிஜிட்டல் மோசடிகளும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன. போன் மூலமாகவோ அல்லது ஓடிபி (OTP) பகிர்ந்தோ உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டால், இனி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு நிதியுதவி அளிக்கும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஒரு புரட்சிகரமான முடிவை எடுத்துள்ளது.
தவறுதலாக ஆன்லைன் மோசடிகளில் சிக்கி பணத்தை இழக்கும் வாடிக்கையாளர்களுக்கு, அதிகபட்சமாக ரூ. 25,000 வரை இழப்பீடு வழங்க RBI உத்தரவிட்டுள்ளது. நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள் சந்திக்கும் பெரும்பாலான மோசடிகள் ரூ. 50,000-க்கும் குறைவாகவே இருப்பதால், இந்த நடவடிக்கை அவர்களுக்கு பெரும் நிம்மதியைத் தரும்.
இந்த இழப்பீட்டுத் தொகையில் 85 சதவீதப் பங்கு ‘டெபாசிட்டர் கல்வி மற்றும் விழிப்புணர்வு’ (Depositor Education and Awareness) நிதியிலிருந்து வழங்கப்படும். எனினும், ஒரு நபர் தனது வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே இந்தச் சலுகையைப் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மீது பொதுமக்களின் நம்பிக்கையை அதிகரிக்கவும், நிதி இழப்புகளிலிருந்து அவர்களைப் பாதுகாக்கவும் ரிசர்வ் வங்கி இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.