WhatsApp ‘கோஸ்ட் பேயரிங்’ ஆபத்து! பாஸ்வேர்ட் இல்லாமலேயே உங்கள் கணக்கு ஹேக் செய்யப்படலாம்: தப்பிப்பது எப்படி?
December 22, 2025

இந்திய சைபர் பாதுகாப்பு முகமையான CERT-In, வாட்ஸ்அப் பயனர்களுக்கு ‘கோஸ்ட் பேயரிங்’ (Ghost Pairing) எனப்படும் புதிய வகை சைபர் தாக்குதல் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. இதில் ஹேக்கர்கள் கடவுச்சொல் அல்லது சிம் கார்டு இல்லாமலேயே உங்கள் வாட்ஸ்அப் கணக்கை முழுமையாகக் கைப்பற்ற முடியும். சாதனங்களை இணைக்கும் (Device Linking) வசதியைத் தவறாகப் பயன்படுத்தி இந்தத் மோசடி அரங்கேறுகிறது.
சந்தேகத்திற்கிடமான லிங்க்குகள் மூலம் பயனர்களின் தொலைபேசி எண்களைப் பெற்று, ஹேக்கர்கள் தங்கள் சாதனங்களை உங்கள் கணக்குடன் இணைக்கின்றனர். இதிலிருந்து தப்பிக்க, அறிமுகமில்லாத லிங்க்குகளைத் தவிர்க்கவும் மற்றும் உங்கள் வாட்ஸ்அப்பில் உள்ள ‘Linked Devices’ பகுதியை அடிக்கடி சரிபார்த்து, தெரியாத சாதனங்களை உடனடியாக லாக் அவுட் செய்யவும்.