RAC பயணிகளுக்கு சூப்பர் செய்தி ரயில்வேயின் முக்கிய விதிமுறையால் முழு சீட் உறுதி!

இந்திய ரயில்வேயில் தினமும் கோடிக்கணக்கான பயணிகள் பயணிக்கின்றனர், அவர்களில் சிலருக்கு RAC (Reservation Against Cancellation) டிக்கெட்டுகள் கிடைக்கின்றன. RAC டிக்கெட் என்பது ரயில் பயணத்திற்கு அனுமதி கிடைத்தாலும், முழு படுக்கை (Berth) கிடைக்காமல் மற்ற பயணியுடன் ஒரு இருக்கையைப் பகிர்ந்துகொள்வதைக் குறிக்கிறது. இருப்பினும், ரயில் புறப்பட்ட பிறகும் இந்த RAC டிக்கெட்டை முழு இருக்கையாக உறுதிப்படுத்த ஒரு முக்கிய விதிமுறை உள்ளது.
பயணம் தொடங்கிய பின், டிக்கெட் பரிசோதகர் (TTE) முதன்மையாக வராத அல்லது பயணத்தை ரத்து செய்த உறுதிசெய்யப்பட்ட பயணிகளின் எண்ணிக்கையைப் பார்க்கிறார். மேலும், உறுதிப்படுத்தப்பட்ட பயணிகள் நடுவில் இறங்கினால், அந்த இருக்கைகளும் காலியாகிவிடும். ரயில்வே விதிகளின்படி, இந்த காலியான முழு இருக்கைகள் முதலில் RAC பயணிகளுக்கு ஒதுக்கப்படுகின்றன. யாருடைய RAC எண் குறைவாக இருக்கிறதோ, அவருக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. உதாரணத்திற்கு, RAC 1 பயணிக்கு RAC 2 பயணியை விட முன்னதாக முழு படுக்கை கிடைத்து, இருக்கையைப் பகிர வேண்டிய நிலைமை நீங்கிவிடும்.