PoK, அக்சாய் சின் மாயம்! 4 நாட்களில் அந்தி பல்டி அடித்ததா ட்ரம்ப் அரசு?

இந்திய வரைபடத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) மற்றும் அக்சாய் சின் பகுதிகளை உள்ளடக்கி வெளியிடப்பட்ட பதிவை அமெரிக்கா திடீரென நீக்கியுள்ளது. ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்தத் தலைகீழ் மாற்றம், டெல்லியுடனான இருதரப்பு உறவில் புதிய சிக்கல்களை ஏற்படுத்துகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் அந்த சர்ச்சைக்குரிய பதிவை நீக்கியது தற்போது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. முதலில் முழுமையான இந்திய வரைபடத்தைப் பயன்படுத்தி சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்ததாகக் கருதப்பட்டது. ஆனால், இப்போது வாஷிங்டன் மவுனம் காப்பது ஏன் என்பது புரியாத புதிராக உள்ளது. இந்தியா தனது எல்லை நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தாலும், அமெரிக்காவின் இந்த பின்வாங்கல் தெற்காசிய அரசியல் சூழலில் பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.