PM மக்களின் எண்ணங்களை பிரதிபலித்துள்ளார்: TTV
May 7, 2025

ஆபரேஷன் சிந்தூர் மூலம் ஒட்டுமொத்த மக்களின் எண்ணங்களை PM மோடி பிரதிபலித்துள்ளார் என டிடிவி தினகரன் பாராட்டியுள்ளார். தனது X பதிவில், 9 துல்லிய தாக்குதல்களின் மூலம் பயங்கரவாதிகளின் உள்கட்டமைப்பை சிதைத்திருக்கும் ராணுவத்துக்கு வாழ்த்துகள் என்றார். பயங்கரவாதத்தை வேரோடு அழிக்க உறுதிகொண்டிருக்கும் மோடிக்கும் ராணுவத்திற்கும் தேசத்தின் மக்கள் அனைவரும் துணைநிற்போம் என தெரிவித்துள்ளார்.