NRC அச்சத்தில் 60 வயது முதியவர் தற்கொலை
August 4, 2025

வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்குப் பிறகு, தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) மற்றும் தடுப்பு முகாம் குறித்த அச்சத்தால் கொல்கத்தாவில் 60 வயது முதியவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். குந்த்காட் பகுதியைச் சேர்ந்த திலீப் குமார் சாஹா (61), சனிக்கிழமை இரவு மன உளைச்சல் காரணமாக தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஞாயிற்றுக்கிழமை காலை ரீஜென்ட் பார்க் போலீசார் அவரது உடலை மீட்டனர்.
சமீப நாட்களாக NRC குறித்த கவலையில் சாஹா இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். தன்னை தடுப்பு முகாமிற்கு அனுப்பிவிடுவார்கள் அல்லது வங்காளதேசத்திற்கு திருப்பி அனுப்புவார்கள் என்று அவர் அடிக்கடி கூறிவந்தார். இந்த மன அழுத்தத்தைத் தாங்க முடியாமல் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்தில் இருந்து தற்கொலைக் குறிப்பும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.