IPL 2026 ஏலம்: 1355 இல்லை, வெறும் 350 வீரர்கள் மட்டும்! யார் யாருக்கு வாய்ப்பு?
December 9, 2025

IPL 2026க்கான வீரர்களின் ஏலம் வரும் டிசம்பர் 16 அன்று அபுதாபியில் நடைபெற உள்ளது. ஆரம்பத்தில் 1355 வீரர்கள் பதிவு செய்திருந்த நிலையில், பிசிசிஐ (BCCI) மற்றும் உரிமையாளர்கள் ஆலோசனையின் பேரில், அதில் இருந்து 1005 வீரர்கள் நீக்கப்பட்டு, இறுதிப் பட்டியலில் வெறும் 350 வீரர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். இதில், குயின்டன் டி காக் உட்பட சில முக்கிய வீரர்கள் கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த 350 வீரர்களின் இறுதிப் பட்டியலில் யார் யார் இருக்கிறார்கள் என்பதில் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எந்தெந்த வீரர்கள் கோடிகளைக் குவித்து, எந்தெந்த அணிகளில் இணைகிறார்கள் என்பதைப் பார்க்க அனைவரும் காத்திருக்கின்றனர். இந்த சுருக்கப்பட்ட பட்டியலின் மூலம் 10 உரிமையாளர்களும் தங்களது அணியை நிறைவு செய்யவுள்ளனர்.