IPL-ல் புதிய ரோலில் கேன் வில்லியம்சன்!

IPL-ல் புதிய ரோலில் கேன் வில்லியம்சன்!

நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் கேன் வில்லியம்சன், தமிழக ரசிகர்களிடையே ‘கேன் மாமா’ என பிரபலமானவர். அவரது நுட்பமான ஆட்டம் மற்றும் தரமான பேட்டிங் பாணி காரணமாக அவருக்கு தனி ரசிகர் வட்டம் உள்ளது. ஆனால் சமீபத்திய IPL மெகா ஏலத்தில் எந்த அணியும் அவரை தேர்வு செய்யவில்லை, இது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

எதிர்பாராத வகையில், IPL-ல் விளையாட முடியாத நிலையில், கேன் வில்லியம்சன் ரசிகர்களுக்கு புதிய பரிசாக வித்தியாசமான பாதையை தேர்வு செய்துள்ளார். அவர் இந்த சீசனில் போட்டி வர்ணனையாளராக (commentator) பணியாற்ற உள்ளார். விளையாட்டு களத்தில் தனது அனுபவங்களை பகிர்ந்து, ரசிகர்களுடன் புதிய ரீதியில் இணைந்திருப்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளார். இது அவரது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *