iPhone 17 வெளியீட்டுக்கு முன்னரே 5.29 லட்சம் கோடி லாபம் ஈட்டிய Apple
September 19, 2025

உலகம் முழுவதும் iPhone 17 மாடல்களின் விற்பனை தொடங்கியுள்ள நிலையில், Apple நிறுவனம் வெளியீட்டுக்கு முன்னரே பெரும் லாபம் ஈட்டியுள்ளது. iPhone 17 அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, கடந்த 10 நாட்களில் Apple-ன் பங்குகள் 1.51% உயர்ந்தன. இதன் விளைவாக, நிறுவனத்தின் சந்தை மதிப்பு $60 பில்லியன், அதாவது இந்திய மதிப்பில் சுமார் ₹5.29 லட்சம் கோடி அதிகரித்துள்ளது.
புதிய iPhone-க்கான வாடிக்கையாளர்களின் ஆர்வம் காரணமாகவே இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். விற்பனை தொடங்குவதற்கு முன்னரே கிடைத்த இந்த வெற்றி, புதிய சாதனத்தின் மீதான பெரும் எதிர்பார்ப்பைக் காட்டுகிறது. வரும் நாட்களில் இந்த போக்கு தொடரலாம் எனவும், Apple பங்குகளின் மதிப்பு மேலும் அதிகரிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.