Apple WWDC 2025: iOS 19, iPhone 17 Air, புதிய சாஃப்ட்வேர்கள் வெளிவரவுள்ளது!

Apple ஆண்டுச்சந்திப்பு – உலகளாவிய டெவலப்பர்கள் மாநாடு (WWDC) 2025 – ஜூன் 9 முதல் 13 வரை நடைபெற உள்ளது. WWDC 2025 இல், Apple தனது iOS 19, புதிய Apple Intelligence அம்சங்கள் மற்றும் பல்வேறு சாஃப்ட்வேர்களை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், iPhone 17 Air பற்றிய முன்னோட்டத்தையும் Apple வழங்கலாம். “WWDC 2025 இல், Apple டெவலப்பர்களுக்கு புதிய கருவிகள், கட்டமைப்புகள் மற்றும் அம்சங்களை விளக்கவுள்ளோம்,” என்று நிறுவனம் அறிவித்துள்ளது.
நிகழ்ச்சியை Apple Developer ஆப், Developer இணையதளம் மற்றும் YouTube வாயிலாக நேரலையாக பார்க்கலாம். iOS 19 இல் புதிய UI, மேம்பட்ட கேமரா அம்சங்கள் மற்றும் Siri அப்டேட்கள் இருக்கலாம். Apple Watch 11 உடன் இரத்த அழுத்தம் மற்றும் சக்கரை அளவீட்டிற்கான வசதிகள் வரும் என கூறப்படுகிறது. மேலும், புதிய Mac Pro பற்றிய தகவல்களும் வெளிவர வாய்ப்பு உள்ளது.