Air Purifier விஷத்தை கக்குகிறதா? எய்ம்ஸ் மருத்துவரின் அதிர்ச்சி எச்சரிக்கை!

Air Purifier விஷத்தை கக்குகிறதா? எய்ம்ஸ் மருத்துவரின் அதிர்ச்சி எச்சரிக்கை!

இந்தியாவில் பல பகுதிகளில் காற்று மாசுபாடு அதிகரித்து வரும் நிலையில், மக்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் ஏர் பியூரிஃபையர்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (AIIMS) குழந்தை மருத்துவத் துறை மருத்துவர் ஹிமான்ஷு பதானி, சில ஏர் பியூரிஃபையர்கள் தீங்கு விளைவிக்கும் ஓசோன் வாயுவை வெளியிடுவதாக எச்சரித்துள்ளார். இந்த வாயு நுரையீரலுக்குள் சென்று கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி, ஆரோக்கியத்திற்குப் பேராபத்தை விளைவிக்கும்.

பியூரிஃபையர் வாங்கும் போது கவனமாக இருக்க வேண்டும் என்று டாக்டர் பதானி வலியுறுத்தியுள்ளார். ‘ஐயனைசர்’ (ionizer) எனக் குறிப்பிடப்பட்டுள்ள சாதனங்கள் ஓசோனை வெளியிடும் வாய்ப்புள்ளது. ஓசோன் வாயு தொடர்ந்து வெளிப்படும்போது மார்பு எரிச்சல், மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் நுரையீரலில் வீக்கம் ஏற்படலாம். குறிப்பாக, ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் ஆஸ்துமா, சிஓபிடி போன்ற சுவாச நோயாளிகளுக்கு இது மிகவும் ஆபத்தானது. எனவே, ஓசோன் இல்லாத ‘HEPA’ (ஹெபா) வடிகட்டி கொண்ட சுத்திகரிப்பான்களை மட்டுமே பயன்படுத்த அவர் அறிவுறுத்துகிறார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *