மகளிர் உரிமைத் தொகை.. விண்ணப்பிக்க புது ஏற்பாடு

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இதுவரை இடம் பெறாத பெண்களுக்கு புதிய வாய்ப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. வரும் நாளை முதல், புதிய விண்ணப்பங்களை ஏற்கும் வகையில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய ஏற்பாடு மூலம் பலரும் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் இந்தத் திட்டத்தின் கீழ், தற்போது வரை சுமார் 1.10 கோடி பெண்கள் நிதியுதவி பெறுகின்றனர். ஆனால், சிலர் ஏதேனும் காரணங்களால் இந்தத் திட்டத்தில் பதிவு செய்ய தவறியிருந்தனர். அவர்களையும் இத்திட்டத்தில் இணைக்கும் முயற்சியாகவே இந்த புதிய விண்ணப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திட்டத்திற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை நேரில் தெரிந்து கொண்டு, பயன்பெற அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.