சீனப் பொருள்களை புறக்கணிப்போம்: PM மோடி

இந்தியாவில் உள்ளூரிலேயே தயாரிக்கப்படும் பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக இந்து பண்டிகைகள் நாட்காட்டியில் வருவதால், மக்களுக்கான அவரது உரையில், வெளிநாட்டு பொருட்களையும் குறிப்பாக சீன தயாரிப்புகளையும் புறக்கணிக்க வேண்டும் எனவும், அதற்கு பதிலாக இந்திய தயாரிப்புகளை பயன்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். மலிவான விலையில் கிடைக்கும் தரம் குறைந்த விநாயகர் சிலைகள் மற்றும் பல சிறிய பண்டிகை பொருட்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதால், இந்திய கைவினைக் கலைஞர்கள் கடும் பாதிப்பை சந்திக்கின்றனர் என்று அவர் கூறினார்.
மேலும், நாம் தினசரி பயன்படுத்தும் பொருட்களில் எத்தனை வெளிநாட்டு தயாரிப்புகள் உள்ளன என்பதை மக்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும், ‘வொக்கல் ஃபர் லோகல்’ (Local for Vocal) என்ற கனவுக்காக, நாட்டின் சொந்த தயாரிப்புகளை ஆதரிக்க வேண்டும் என்றும் மோடி வலியுறுத்தினார். இது போன்ற செயற்பாடுகள் மட்டும் தான் இந்தியா பொருளாதாரத்தில் தன்னிறைவை அடைய வழிவகுக்கும் எனவும், உள்ளூர் தொழில்கள் வளர வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்தார்.