கொரோனாவை விட ஆபத்தான தொற்று: WHO எச்சரிக்கை!

கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் இந்த நேரத்தில், உலக சுகாதார அமைப்பு (WHO) மேலும் ஒரு புதிய மற்றும் ஆபத்தான தொற்றுநோயை குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. Aspergillus fumigatus எனும் ஒரு பூஞ்சைத் தொற்று தற்போது சில பகுதிகளில் பரவத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முதன்மையாக நுரையீரல் மற்றும் மூளை ஆகிய முக்கிய உறுப்புகளை தாக்கும் தன்மையுடையது. இது கிருமிநாசினிகள் எதிராக செயல்படக்கூடிய வகையில் உருவாகி வருகிறது, எனவே சிகிச்சை பெற்றாலும், உயிரிழக்கும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.
அந்த வகையில், இந்த பூஞ்சை நோயால் பாதிக்கப்படுவோருக்கு உயிரிழப்பு சாத்தியம் 85.2% என்று WHO தெரிவித்துள்ளது, இது மருத்துவ சமுதாயத்திற்கே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைக்கு இந்தியாவில் இந்த தொற்று கண்டறியப்படவில்லை என்பது நம்மை சற்று நிம்மதியாக வைத்தாலும், முன்னெச்சரிக்கையாக சுகாதார அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்த புதிய தொற்றின் பரவலைத் தடுக்க சரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.