பாகிஸ்தான் ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு: வில்லியம்சன், ரச்சின் உள்ளிட்ட 5 பேருக்கு இடமில்லை!

நியூசிலாந்து அணியின் பாகிஸ்தான் ஒருநாள் தொடருக்கான குழுவை அறிவித்துள்ளது. இந்த அணி அறிவிப்பில் கேன் வில்லியம்சன் மற்றும் ரச்சின் ரவீந்திரா போன்ற முக்கிய வீரர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை. நியூசிலாந்து அணியின் வழக்கமான கேப்டன் மிட்செல் சாண்டனர், ஐபிஎல் தொடரில் மும்பை அணியுடன் விளையாடிவரும் நிலையில், அவருக்குப் பதிலாக டாம் லேதம் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த அணியில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து 13 பேரில் 8 பேர் இடம்பெற்றுள்ள நிலையில், முதல் முறையாக நிக் கெல்லி மற்றும் முகமது அப்பாஸ் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ரச்சின் ரவீந்திரா, டெவான் கான்வே, க்ளென் பிளிப்ஸ் மற்றும் வில்லியம்சன் ஆகியோர், ஐபிஎல் மற்றும் பிற காரணங்களால் இந்த அணியில் இடம் பெறவில்லை.
பாகிஸ்தான் எதிரான முதலில், இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டிகள் மார்ச் 29, ஏப்ரல் 2 மற்றும் ஏப்ரல் 5 அன்று நடைபெறவுள்ளன.
நியூசிலாந்து அணியில் பட்டியல்: டாம் லேதம் (கேப்டன்), முகமது அப்பாஸ், ஆதி அசோக், மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாம்ப்மேன், ஜேக்கப் டஃப்பி, மிட்ச் ஹே, நிக் கெல்லி, டேரில் மிட்செல், வில் ஓ’ரூர்க், பென் ஷீர்ஸ், நேதன் ஸ்மித், வில் யங்.