ஹோர்முஸ் நீரிணையில் இந்திய கப்பல்கள் பயணிக்க ஈரான் அரசு அனுமதி

ஹோர்முஸ் நீரிணையில் இந்திய கப்பல்கள் பயணிக்க ஈரான் அரசு அனுமதி

மேற்காசியாவில் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில் இந்தியா உள்ளிட்ட ஐந்து நட்பு நாடுகளின் கப்பல்கள் மட்டும் ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க ஈரான் அனுமதி அளித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல்களுக்குப் பிறகு மூடப்பட்ட இந்த முக்கிய கடல் வழித்தடம் தற்போது இந்தியாவின் எரிசக்தி தேவையை கருத்தில் கொண்டு திறக்கப்பட்டுள்ளது. இந்திய அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த முக்கிய முடிவை ஈரான் எடுத்துள்ளது.

இது குறித்து ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறுகையில் சீனா, ரஷ்யா, இந்தியா போன்ற நட்பு நாடுகளின் கப்பல்கள் தடையின்றி பயணிக்கலாம் எனத் தெரிவித்தார். அதே வேளையில் எதிரி நாடுகளுடன் தொடர்புடைய கப்பல்களுக்கு அனுமதி கிடையாது என்பதில் ஈரான் உறுதியாக உள்ளது. இந்தியாவின் எரிபொருள் மற்றும் உர விநியோகத்தைப் பாதிப்பிலிருந்து காக்க இந்த அனுமதி பெரும் உதவியாக அமையும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *