விளாத்திகுளம் மாணவி வழக்கில் காவல்துறையினரின் அலட்சியத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கடும் கண்டனம்
March 16, 2026

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் 12ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், காவல்துறையினர் எவ்வித அலட்சியமும் காட்டக்கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரித்துள்ளது. காணாமல் போன புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிபதிகள் சத்தியகுமார் மற்றும் ஜோதிராமன் அமர்வு தெரிவித்தது.
இந்த வழக்கில் அறிவியல் பூர்வமான விசாரணையை உறுதிப்படுத்தவும், டிஎன்ஏ மாதிரிகளின் முடிவுகளை விரைந்து சமர்ப்பிக்கவும் அரசு தரப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணையின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்ய ஆணையிட்ட நீதிபதிகள், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஏப்ரல் 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.