துபாயில் வதந்தி பரப்பிய 19 இந்தியர்கள் அதிரடி கைது
March 16, 2026

ஈரான் நடத்திய தாக்குதல் தொடர்பாக சமூக வலைதளங்களில் பழைய வீடியோக்களையும் தவறான தகவல்களையும் பரப்பியதாக 19 இந்தியர்கள் உட்பட மொத்தம் 35 பேரை ஐக்கிய அரபு அமீரக காவல்துறை கைது செய்துள்ளது. போர் பதற்றத்தைப் பயன்படுத்தி பொதுமக்களிடையே தேவையற்ற பீதியை ஏற்படுத்தியதே இந்த அதிரடி நடவடிக்கைக்கு முக்கிய காரணமாகும்.
நாட்டின் பாதுகாப்பு மற்றும் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படுபவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமீரக அரசு எச்சரித்துள்ளது. செய்திகளின் உண்மைத்தன்மையை ஆராயாமல் வதந்திகளைப் பகிர வேண்டாம் என்றும், அதிகாரப்பூர்வமற்ற வீடியோக்களை பதிவேற்றுவது தண்டனைக்குரிய குற்றம் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.