பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த பட்டாலியன் கமாண்டன்ட் அதிரடி கைது

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த பட்டாலியன் கமாண்டன்ட் அதிரடி கைது

கோவை அருகே பெண் காவலருக்கு நீண்டகாலமாக பாலியல் தொல்லை கொடுத்து வந்த நான்காவது பட்டாலியன் கண்காணிப்பாளர் செந்தில்குமார் அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டியதாக பெண் உதவி ஆய்வாளர் புஷ்பகுமாரி மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்த செந்தில்குமார் தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரிக்க மாநகர காவல்துறை சார்பில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு அளிக்க வேண்டிய உயர் அதிகாரியே இத்தகைய இழிவான செயலில் ஈடுபட்டது காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தவறு செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர காவல்துறை முடிவெடுத்துள்ள நிலையில் இந்த சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *