நாடாளுமன்ற படிக்கட்டுகளில் அமர்ந்து தேநீர் அருந்திய ராகுல் காந்தி மீது அமித் ஷா கடும் தாக்குதல்

நாடாளுமன்ற படிக்கட்டுகளில் அமர்ந்து தேநீர் அருந்திய ராகுல் காந்தி மீது அமித் ஷா கடும் தாக்குதல்

கௌஹாத்தி பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்ற படிக்கட்டுகளில் அமர்ந்து தேநீர் மற்றும் பக்கோடா சாப்பிட்டு ஜனநாயகத்தின் கண்ணியத்தை குறைத்துவிட்டதாக குற்றம் சாட்டினார். மோடியை எதிர்ப்பதாக நினைத்து ராகுல் காந்தி இப்போது நாட்டின் நலனுக்கே எதிராக செயல்படுவதாகவும், இது சர்வதேச அளவில் இந்தியாவின் இமேஜை பாதிப்பதாகவும் அவர் கூறினார்.

நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதங்களில் பங்கேற்பதை தவிர்த்துவிட்டு ராகுல் காந்தி நாடகமாடுவதாக அமித் ஷா சாடினார். டெல்லியில் நடைபெற்ற சர்வதேச செயற்கை நுண்ணறிவு மாநாட்டின் போது காங்கிரஸ் செய்த போராட்டங்கள் இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சியை மறைக்கும் முயற்சி என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *