காங்கிரஸை வைத்து சண்டையிட வேண்டாம் என சிபிஎம்மிற்கு செல்வப்பெருந்தகை கடும் பதிலடி

காங்கிரஸை வைத்து சண்டையிட வேண்டாம் என சிபிஎம்மிற்கு செல்வப்பெருந்தகை கடும் பதிலடி

தமிழகத் தேர்தல் தொகுதிப் பங்கீட்டில் திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் இடங்கள் ஒதுக்கப்பட்டதற்கு சிபிஎம் மாநிலச் செயலாளர் பி. சண்முகம் அதிருப்தி தெரிவித்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அதற்கு நேரடிப் பதிலடி கொடுத்துள்ளார். காங்கிரஸை ஒரு காரணமாக வைத்து யாரும் தேவையற்ற தகராறில் ஈடுபட வேண்டாம் என அவர் வலியுறுத்தினார்.

மக்களுக்காகவே தாங்கள் கூடுதல் இடங்களைப் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இடதுசாரிகளுக்குக் கூடுதல் தொகுதிகள் தேவையென்றால் முதலமைச்சர் ஸ்டாலினிடம் கேட்டுப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். கூட்டணிக்குள் எழுந்துள்ள இந்த வார்த்தைப் போர் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *