23 வயதில் ஓய்வு – கோடிக்கணக்கில் செட்டில்மெண்ட் பெற்ற ரஷ்ய இளைஞர்!

23 வயதில் ஓய்வு – கோடிக்கணக்கில் செட்டில்மெண்ட் பெற்ற ரஷ்ய இளைஞர்!

வாழ்க்கையில் நேர்மையாக உழைத்து ஓய்வு பெறும் கனவு பலருக்கும் இருக்கும். பொதுவாக 60 வயதில் ஓய்வு பெறுவது வழக்கம். ஆனால் ரஷ்யாவின் பாவெல் ஸ்டெப்சொன்கோ என்ற இளைஞர் 23 வயதிலேயே ஓய்வு பெற்றதுடன், பல கோடி ரூபாய் செட்டில்மெண்ட் தொகையும் பெற்றுள்ளார்.

பாவெல், 16 வயதில் ரஷ்யாவின் உள்துறை அமைச்சகத்திற்குச் சொந்தமான கல்வி நிறுவனத்தில் சேர்ந்தார். அங்கிருந்து பட்டம் பெற்ற பிறகு ரஷ்ய ராணுவத்தில் சேர்ந்தார். ரஷ்ய ராணுவ விதிப்படி, ஒரு மாதம் வேலை செய்தால் மூன்று மாத கால சேவையாக கணக்கிடப்படும். இதனால் இரண்டே ஆண்டுகளில் 6 ஆண்டு சேவை கால தகுதியை பாவெல் பெற்றார்.

இந்த சாதனையால், அவர் 23 வயதிலேயே முழு ஓய்வூதியத்துடன் ஓய்வு பெற்றார். இதற்கு அவர் பல கோடிகளைக் கையகப்படுத்தியதுடன், வாழ்நாள் முழுவதும் பென்ஷனும் பெறவுள்ளார். இவரது சாதனை சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *