ஈரான் கடல் எல்லையில் இந்திய கப்பல்கள்.. வெளியுறவுத்துறை கொடுத்த அதிரடி விளக்கம்

ஈரான் கடல் எல்லையில் இந்திய கப்பல்கள்.. வெளியுறவுத்துறை கொடுத்த அதிரடி விளக்கம்

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கியுள்ள இந்திய எண்ணெய் கப்பல்களின் பயணம் குறித்து தற்போது பெரும் குழப்பம் நிலவி வருகிறது. வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஈரான் அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, ‘புஷ்பக்’ மற்றும் ‘பரிமல்’ ஆகிய இரு கப்பல்கள் அந்தப் பகுதியை கடந்ததாக தகவல்கள் வெளியாகின, ஆனால் மத்திய அரசு இதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், எரிசக்தி பாதுகாப்பு குறித்து ஈரானுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் கூறினார். இருப்பினும், கப்பல்கள் கடக்க ஈரான் அதிகாரப்பூர்வ அனுமதி அளித்ததா என்பதில் இன்னும் தெளிவு இல்லை என்றும், இது குறித்த விரிவான விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *