வங்காள விரிகுடாவில் 3240 கிமீ தொலைவு ஏவுகணை சோதனைக்கு இந்தியா தயார்

இந்தியாவின் கடல்சார் பாதுகாப்புத் திறனை மேம்படுத்தும் வகையில், டிசம்பர் 24, 2025 அன்று அப்துல் கலாம் தீவு அருகே 3240 கிலோமீட்டர் தூரம் வரை செல்லக்கூடிய ஏவுகணை சோதனையை நடத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. இதற்காக வங்காள விரிகுடா பகுதியில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு நோட்டாம் (NOTAM) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாட்டின் அணுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாக இந்த நீண்ட தூர ஏவுகணை சோதனை பார்க்கப்படுகிறது.
முன்னதாக டிசம்பர் மாத தொடக்கத்தில் நடைபெறவிருந்த இந்த சோதனை, இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீன உளவு கப்பல்களின் நடமாட்டம் காரணமாக தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்தியாவின் நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணை தொழில்நுட்பங்களை சீனா தொடர்ந்து கண்காணித்து வரும் நிலையில், இந்தியா மிகுந்த பாதுகாப்பு எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறது. இந்த சோதனை வெற்றிகரமாக அமையும் பட்சத்தில், பிராந்திய பாதுகாப்பில் இந்தியாவின் கை ஓங்குவதுடன் எதிரி நாடுகளுக்கு இது ஒரு வலுவான எச்சரிக்கையாகவும் அமையும்.