கர்ப்பிணி மனைவியின் ஆபாச படங்களை நண்பர்களுக்கு பகிர்ந்த கணவன்! காசிப்பூரில் அரங்கேறிய கொடூரம்
December 17, 2025

உத்தரபிரதேச மாநிலம் காசிப்பூரில் கர்ப்பிணி மனைவியின் ஆபாசப் படங்களை நண்பர்களுக்கு அனுப்பி, அவரை விற்க முயன்ற கணவன் மீது பரபரப்பு புகார் எழுந்துள்ளது. இதனை தட்டிக்கேட்ட பெண்ணை வலுக்கட்டாயமாக மது அருந்தச் செய்து, கணவன் கொடூரமான முறையில் தாக்கியுள்ளார். தனது மனைவியை விற்கப்போவதாக அந்த நபர் மிரட்டியதும் தெரியவந்துள்ளது.
தற்போது ஐந்து மாத கர்ப்பிணியாக உள்ள அந்த பெண், நீதி கேட்டு காவல் கண்காணிப்பாளரை அணுகியுள்ளார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் கணவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நீதி கிடைக்காவிட்டால் தற்கொலை செய்துகொள்வதாக அப்பெண் எச்சரித்துள்ளார்.