டிரம்பின் புதிய ‘கோல்டு கார்டு’: நிரந்தர அமெரிக்க குடியுரிமைக்கு விலை உண்டா?

டிரம்பின் புதிய ‘கோல்டு கார்டு’: நிரந்தர அமெரிக்க குடியுரிமைக்கு விலை உண்டா?

அமெரிக்காவில், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘கோல்டு கார்டு’ கொள்கையின்படி, பணக்கார வெளிநாட்டினர் நிரந்தர குடியுரிமை பெற முடியும். வர்த்தகத் துறைச் செயலாளர் ஹொவர்ட் லூட்னிக் அறிவித்த இந்தப் பிரீமியம் விசா திட்டத்திற்கு, விண்ணப்பதாரர்கள் ஒருமுறை 10 லட்சம் அமெரிக்க டாலர்கள் (சுமார் 8.5 கோடி ரூபாய்) செலுத்த வேண்டும். இது, தற்போதுள்ள EB-1 மற்றும் EB-2 கிரீன் கார்டு பிரிவுகளுக்குப் பதிலாக நடைமுறைப்படுத்தப்படும், இதன்மூலம், கார்டு வைத்திருப்பவர்களுக்கு அமெரிக்காவில் நிரந்தரமாக வசிப்பதற்கும், வேலை செய்வதற்கும் முழு உரிமை கிடைக்கும்.

இந்த ‘கோல்டு கார்டு’க்கான முக்கிய நிபந்தனைகளில் ஒன்று, கார்டு வைத்திருப்பவர்கள் அமெரிக்கக் குடிமக்களைப் போலவே தங்கள் உலகளாவிய வருமானத்தின் மீது வரி செலுத்த வேண்டும். அதாவது, அவர்களின் வருமானம் உலகின் எந்தப் பகுதியில் ஈட்டப்பட்டாலும், அமெரிக்க அரசு அதற்கு வரி விதிக்கும். கூடுதலாக, ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் 15,000 டாலர்கள் (சுமார் 13 லட்சம் ரூபாய்) கூடுதல் கட்டணமும் செலுத்த வேண்டும். இந்த புதிய கொள்கை, உலகெங்கிலும் உள்ள வசதியான வெளிநாட்டினருக்கு அமெரிக்காவில் குடியேறுவதற்கு ஒரு புதிய வழியைத் திறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *