மாமியாருக்குப் பயப்படும் மருமகள்களுக்கு உயர் நீதிமன்றம் ஒரு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!

டெல்லி உயர் நீதிமன்றம், வயதான மாமியார் மாமனார் அமைதியான வாழ்வு வாழ்வதை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு முக்கிய தீர்ப்பை அளித்துள்ளது. குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ், மருமகளுக்கு கூட்டுக்குடும்ப வீட்டில் வாழ்வதற்கு முழுமையான உரிமை இல்லை என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. இந்த தீர்ப்பின்படி, சொத்தின் உரிமையாளர்களான மாமியார் மாமனார் விரும்பினால், மருமகளை வீட்டை விட்டு வெளியேறச் சொல்லலாம், அதன்மூலம் அவர்களது அமைதியான வாழ்வுக்கு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.
நீதிபதி யோகேஷ் கன்னா, கீழ் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மருமகள் தாக்கல் செய்த மனுவை விசாரித்தபோது இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கினார். 74 மற்றும் 69 வயதுள்ள வயோதிகர்கள் தங்களது அமைதியான வாழ்வுக்கு உரிமை கொண்டவர்கள் என்றும், மகன் மற்றும் மருமகளின் குடும்ப பிரச்சனைகளால் பாதிக்கப்படக்கூடாது என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. உறவுகள் சுமூகமாக இல்லாத போது, மருமகளுடன் ஒரே கூரையின் கீழ் வாழ்வது வயோதிகர்களுக்கு சரியாக இருக்காது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.