33 கோடியில் ஆன்மாவை விற்ற பெண், இரத்தத்தால் கையெழுத்திட்ட ஒப்பந்தம்!

33 கோடியில் ஆன்மாவை விற்ற பெண், இரத்தத்தால் கையெழுத்திட்ட ஒப்பந்தம்!

ரஷ்யாவில் ஒரு பெண் தனது ‘ஆன்மாவை’ சுமார் 33 கோடி ரூபாய்க்கு விற்றதாக ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளியாகி உள்ளது. ஆன்லைனில் ஆன்மாவை வாங்குவதாக டிமிட்ரி என்ற நபர் இட்ட பதிவைப் பார்த்த கரினா என்ற பெண் அவரை அணுகி தனது ஆன்மாவை விற்க சம்மதித்தார். இந்த விசித்திரமான ஒப்பந்தம் இரத்தத்தால் கையெழுத்திடப்பட்டது.

ஆன்மாவை விற்ற இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. உள்ளூர் ஊடகத்திடம் பேசிய கரினா, தனது முடிவுக்கு எந்த வருத்தமும் இல்லை என்றும், மக்கள் என்ன நினைப்பார்கள் என்பது பற்றி தனக்கு கவலையில்லை என்றும் கூறினார். அந்த பெரிய தொகையை அவர், லாபு-பு பொம்மைகள் மற்றும் ஒரு பிரபலமான பாடகரின் இசை நிகழ்ச்சி டிக்கெட்டுகளை வாங்க பயன்படுத்தினார். டிமிட்ரி, வேடிக்கைக்காக அந்தப் பதிவை இட்டிருந்தாலும், தான் வாங்கிய ஆன்மாவை என்ன செய்வது என்று அவருக்குத் தெரியவில்லை. இந்தச் சம்பவம் பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *