சமூக வலைத்தளங்களில் வைரலான ‘நீர் தேவி’ வீடியோ, உண்மை தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள்
September 18, 2025

மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில் உள்ள நர்மதா நதியின் தண்ணீர் மீது ஒரு மூதாட்டி நடந்து செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இந்த காட்சியை ஒரு அதிசயம் என்று கருதி, ஆயிரக்கணக்கானோர் அந்த மூதாட்டியை ‘நீர் தேவி’ என வணங்கவும், ஆசி பெறவும் திரண்டனர்.
இருப்பினும், இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மை வெளிவந்தது. அந்த மூதாட்டியே இது ஒரு அற்புதம் அல்ல எனத் தெளிவுபடுத்தினார். அவர் நடந்து சென்ற இடத்தில், தண்ணீர் மட்டம் மிகக் குறைவாக, முழங்கால் உயரத்திற்கும் குறைவாகவே இருந்தது. இது அவருடைய வழக்கமான பாதயாத்திரையின் ஒரு பகுதியாகும். இந்த உண்மை தெரியவந்ததும், பக்தர்கள் கூட்டம் ஏமாற்றத்துடன் கலைந்து சென்றது.