நாய்களிடம் இருந்து தப்பிக்க ஓட்டு வீட்டின் கூரை மீது ஏறிய மாடு, வைரலாகும் வீடியோ!
September 17, 2025

ஆந்திர மாநிலம், நிரல் கிராமத்தில் தெரு நாய்களிடம் இருந்து தப்பிக்க ஒரு மாடு ஓட்டு வீட்டின் கூரை மீது ஏறிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. உள்ளூர் விவசாயி ஒருவரின் வீட்டுக்கு வெளியே கட்டப்பட்டிருந்த செல்லப் பிராணி பசுவை, நாய்கள் கூட்டம் திடீரென சூழ்ந்துள்ளது. அச்சத்தில், மாடு கயிற்றை அறுத்துக்கொண்டு ஓடியது. நாய்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்க வேறு வழியின்றி, அருகிலிருந்த ஓட்டு வீட்டின் கூரையில் அது தாவி ஏறியது.
வைரலான வீடியோவில், மாடு கூரையில் அமைதியாக நிற்பதைக் காணலாம். இந்த அசாதாரண காட்சியைக் காண அப்பகுதியில் ஏராளமான கிராம மக்கள் திரண்டனர். பின்னர், கிராம மக்கள் கயிற்றின் உதவியுடன் அந்த மாட்டை பத்திரமாக கீழே இறக்கினர். இந்தச் சம்பவத்தால் வீட்டின் கூரைக்கு பெரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.