இறப்பதற்கு முன் மூளை என்ன நினைக்கிறது? ஆச்சரியமான ஆய்வு முடிவு!

இறப்பதற்கு முன் மூளை என்ன நினைக்கிறது? ஆச்சரியமான ஆய்வு முடிவு!

மனிதன் இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன் மூளைக்குள் என்ன நடக்கிறது என்பது நீண்ட காலமாக ஒரு மர்மமாகவே இருந்து வந்தது. சமீபத்திய ஒரு ஆய்வு இந்த மர்ம முடிச்சை அவிழ்த்துவிட்டது. இறக்கும் தருவாயில், ஒருவரின் மூளை தனது வாழ்க்கையில் நடந்த நல்ல தருணங்களை மீண்டும் நினைத்துப் பார்க்கத் தொடங்குகிறது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்தத் தகவல், மூளை தொடர்பான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 87 வயது வலிப்பு நோயாளியின் ஈ.இ.ஜி (EEG – electroencephalogram) கருவி மூலம் பெறப்பட்டது. அந்த நோயாளிக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பினால் அவர் உயிரிழந்த நிலையில், அவரது மூளையின் செயல்பாடு பதிவானது.

அந்தப் பதிவில், இறப்புக்கு முந்தைய சில நிமிடங்களில் மூளையில் ‘காமா அலைகள்’ (gamma oscillations) எனப்படும் அலைகள் அதிகளவில் இருந்தன. இந்த அலைகள் பொதுவாக நினைவுகள் அல்லது கனவுகள் காணும்போது ஏற்படும். இந்த ஆய்வை மேற்கொண்ட நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அஜ்மல் ஜெம்மார், மூளை தனது இறுதி நேரத்தில் தீவிரமாகச் செயல்பட்டு, மகிழ்ச்சியான நினைவுகளை மீட்டெடுக்கிறது என்று கூறினார். இந்திய நரம்பியல் நிபுணர்களும் இந்த ஆய்வு முடிவுகளுடன் உடன்பட்டு, இறப்பின்போது மூளை அலைகள் தீவிரமாக செயல்படுகின்றன என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *