கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் நடிகர்கள்; தயாரிப்பாளர்களை திட்டி தீர்த்த ஆமிர் கான்!

கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் நடிகர்கள்; தயாரிப்பாளர்களை திட்டி தீர்த்த ஆமிர் கான்!

திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு தேவையற்ற நிதிச்சுமையை ஏற்படுத்தும் சில நடிகர்கள் மீது நடிகர் ஆமிர் கான் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். சமீபத்திய பேட்டியில், சில நடிகர்கள் தங்கள் தனிப்பட்ட ஊழியர்களான டிரைவர்கள், ஸ்பாட் பாய், பயிற்சியாளர்கள் மற்றும் சமையல்காரர்களின் செலவுகளையும் தயாரிப்பாளர்களே ஏற்க வேண்டும் என எதிர்பார்ப்பதாக ஆமிர் கான் தெரிவித்தார். இது திரையுலகிற்கு ‘அவமானகரமானது’ மற்றும் ‘நஷ்டத்தை ஏற்படுத்தும்’ என அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

வெளியில் படப்பிடிப்புக்குச் செல்லும்போது தனது குடும்பத்தினரின் செலவுகளை தானே ஏற்றுக்கொள்வதாக ஆமிர்கான் தெரிவித்தார். தயாரிப்பாளர்கள் ஒப்பனை, சிகை அலங்காரம் மற்றும் உடைகள் போன்ற அத்தியாவசிய செலவுகளை மட்டுமே ஏற்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மேலும், கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் நடிகர்கள் தங்கள் தனிப்பட்ட ஊழியர்களின் செலவுகளை தாங்களே பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *