ஆட்டம் பாட்டம் என அலப்பறை செய்த மாப்பிள்ளை, ஆத்திரமடைந்த மணப்பெண் திருமணத்தை முறித்து நண்பரை மணந்தார்!

மகாராஷ்டிராவின் புல்டாணா மாவட்டத்தில் ஒரு விசித்திரமான திருமணம் அரங்கேறியுள்ளது. இங்கு மணமகன் மற்றும் அவரது நண்பர்கள் மணமகள் வீட்டிற்கு வந்து நீண்ட நேரம் நடனமாடினர். திருமணத்திற்கான நல்ல நேரம் கடந்த பின்னரும், போதையில் இருந்த மணமகனும் அவரது நண்பர்களும் நடனத்தை நிறுத்த மறுத்தனர். இதனால் கடும் கோபமடைந்த மணப்பெண், அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்து திருமணத்தை ரத்து செய்தார்.
இந்த எதிர்பாராத நிகழ்வுக்குப் பிறகு, சமூகத்தில் அவமானம் ஏற்படாமல் இருக்க மணப்பெண்ணின் குடும்பத்தினர் உடனடியாக ஒரு முடிவெடுத்தனர். அங்கிருந்த நண்பர் ஒருவரை மணமகனாக ஏற்றுக்கொண்டு, அதே மண்டபத்தில் அவரைத் திருமணம் செய்துகொள்ள மணமகள் சம்மதித்தார். இந்தச் செய்தி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், மறுநாள் பழைய மணமகனும் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.