ரயில் பயணிகளுக்கு அவசர செய்தி! ஆன்லைன் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் கட்டாயம்

ரயில் பயணிகளுக்கு அவசர செய்தி! ஆன்லைன் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் கட்டாயம்

இந்திய ரயில்வே ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு விதிகளில் பெரிய மாற்றம் செய்ய உள்ளது. வரும் அக்டோபர் 1 முதல், IRCTC இணையதளம் மற்றும் செயலியில், சாதாரண முன்பதிவு தொடங்கும் முதல் 15 நிமிடங்களுக்கு, ஆதார் சரிபார்க்கப்பட்ட கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். பண்டிகை மற்றும் திருமண காலங்களில் டிக்கெட்டுகளுக்கான அதிக தேவையைக் கருத்தில் கொண்டு இந்த விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய விதி தற்போது தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு மட்டுமே பொருந்தும். இப்போது சாதாரண முன்பதிவுக்கும் இது நீட்டிக்கப்பட உள்ளது. இருப்பினும், ரயில்வே PRS கவுன்ட்டர்களில் அல்லது அங்கீகரிக்கப்பட்ட டிக்கெட் முகவர்கள் மூலம் செய்யப்படும் முன்பதிவுகளுக்கு இந்த விதி பொருந்தாது. இந்த நடவடிக்கை பொது பயணிகளுக்கான டிக்கெட் முன்பதிவு செயல்முறையில் மேலும் ஒழுங்கைக் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *