தாய்லாந்து, துறவிகளை மிரட்டி 100 கோடி ரூபாய் பறிப்பு, பெண் கைது

தாய்லாந்து, துறவிகளை மிரட்டி 100 கோடி ரூபாய் பறிப்பு, பெண் கைது

தாய்லாந்தில் பல பௌத்த துறவிகளுடன் பாலியல் உறவு கொண்டு, அவர்களை மிரட்டி சுமார் 100 கோடி ரூபாயை பறித்ததாக ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார். விலாவன் அம்சாவத் என்ற அந்தப் பெண் பாங்கொக்கில் கைது செய்யப்பட்டார். மூத்த துறவிகளை வேண்டுமென்றே குறிவைத்து, உறவுகளை ஏற்படுத்தி, பின்னர் அவர்களிடம் இருந்து பெரும் தொகையை பறித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் குறைந்தது ஒன்பது பௌத்த துறவிகள் தங்கள் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளில் விலாவனின் வங்கிக் கணக்குகளுக்கு சுமார் $1.19 மில்லியன் டாலர் வந்துள்ளதாகவும், அதில் பெரும்பாலான பணம் ஆன்லைன் சூதாட்டத்திற்கு செலவிடப்பட்டதாகவும் காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *